யாழில் வீதியை கடக்க முயன்ற பெண் மோட்டார் சைக்கிள் மோதி பலி

14 ஆவணி 2023 திங்கள் 02:27 | பார்வைகள் : 9145
மோட்டார் சைக்கிளில் விபத்தில் காயமடைந்த வயோதிப பெண்மணி சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார்.
கோப்பாய் தெற்கை சேர்ந்த நாகராசா ராசபூபதி (வயது 68) என்பவரே உயிரிழந்துள்ளார்.
பருத்தித்துறை வீதியில் உள்ள தனது வீட்டுக்கு கடந்த வெள்ளிக்கிழமை இரவு வீதியை கடக்க முயன்றபோது மோட்டார் சைக்கிள் மோதியுள்ளது.
படுகாயமடைந்த பெண் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1