இலங்கையில் வாகன இறக்குமதி கட்டுப்பாட்டில் ஏற்பட்டுள்ள தளர்வு
13 ஆவணி 2023 ஞாயிறு 11:25 | பார்வைகள் : 10520
இலங்கையில், பொது போக்குவரத்திற்காக பயன்படுத்தப்படும் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை தளர்த்த இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அது தொடர்பில் இந்த வாரம் வர்த்தமானி அறிவிப்பை வெளியிட எதிர்பார்த்துள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.
பொது போக்குவரத்திற்காக பயன்படுத்தப்படும் லொறிகள், பாரவூர்திகள் மற்றும் பேருந்துகளை இறக்குமதி செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் இந்த வர்த்தமானி மூலம் தளர்த்தப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய கூறியுள்ளார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan