சிரியா நாட்டின் மீது பாரிய தாக்குதல் - 11 பேர் பலி
26 பங்குனி 2024 செவ்வாய் 16:14 | பார்வைகள் : 9835
சிரியாவில் குடியிருப்பு பகுதிகளுக்கு வந்து தாக்குதல் நடத்தி பெரும் உயிர்ச்சேதத்தை ஏற்படுத்துவதுடன், பொதுமக்களையும், பாதுகாப்பு படையினரையும் கடத்தி பாதுகாப்பு படையினர் 9 பேர் உள்பட 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
சிரியாவில் குடியிருப்பு பகுதிகளில் தங்கள் ஆதிக்கத்தை இழந்துவிட்ட ஐ.எஸ். பயங்கரவாதிகள், அங்குள்ள பாலைவன பிரதேசத்தை தங்களின் மறைவிடங்களாக வைத்திருக்கின்றனர்.
மேலும் பாலைவனப்பகுதியில் வளரும் விலை உயர்ந்த காளான் மற்றும் உணவுப்பொருட்களை சேகரிக்க செல்லும் மக்கள் மீதும் தாக்குதலை நடத்தி வருகின்றனர்.
அந்தவகையில் வடக்கு சிரியாவின் பாலைவனப்பகுதியில் மேற்படி உணவுப்பொருட்களை சேகரிப்பதற்காக பாதுகாப்பு படையினர் உள்ளிட்டோர் வாகனம் ஒன்றில் சென்றனர்.
இந்த வாகனம் அங்கே மறைத்து வைக்கப்பட்டிருந்த ஐ.எஸ். பயங்கரவாதிகளின் கண்ணிவெடியில் சிக்கி வெடித்து சிதறியது.
அந்த நேரத்தில் அங்கே மறைந்திருந்த பயங்கரவாதிகளும் அந்த வாகனத்தில் இருந்தவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இதில் பாதுகாப்பு படையினர் 9 பேர் உள்பட 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும் 3 பேரை பயங்கரவாதிகள் கடத்தி சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பும், பதற்றமும் நிலவி வருகிறது.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan