பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பயன்படுத்த இனி கட்டணம்: மெட்டா அறிவிப்பு

25 பங்குனி 2024 திங்கள் 09:29 | பார்வைகள் : 5537
சமீபத்தில், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் தளங்களை பயன்படுத்துவதற்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்ற அறிவிப்பு வெளியாகி, பயனர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
விளம்பரம் இல்லாத பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் தளங்களை பயன்படுத்த வேண்டுமென்றால் இனி கட்டணம் செலுத்த வேண்டும் என்ற அறிவிப்பு வெளிவந்துள்ளது.
ஏற்கனவே சில காலத்திற்கு முன்பு இது தொடர்பான முடிவை மெட்டா நிறுவனம் எடுத்து இருந்தது. இது மெட்டா நிறுவனத்தின் சந்தா மாதிரியின் ஒரு பகுதியாகும்.
இந்த கட்டண அறிவிப்புக்கு எதிராக, பல பயனர்கள் சமூக வலைத்தளங்களில் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்த கட்டண அறிவிப்பானது இந்தியாவுக்கு பொருந்தாது எனவும், ஐரோப்பாவின் சில நாடுகளுக்கு மட்டும் பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிவிப்புகளின் படி, பேஸ்புக் கட்டணம் EUR 5.99 (சுமார் ரூ. 540 ஆகவும், இன்ஸ்டாகிராம் கட்டணம் EUR 9.99 ஆக (சுமார் ரூ. 900) ஆகவும் குறைத்து அறிவிக்கப்பட்டுள்ளது.
இது முதலில் மாதத்திற்கு சுமார் EUR 9.99(சுமார் ரூ. 880) ஆகவும், iOS மற்றும் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு 12.99 (சுமார் ரூ. 1,100) விதிக்கப்பட்டு இருந்தது.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1