ஒலிம்பிக் போட்டிகளுக்காக பெல்ஜியத்தில் இருந்து குறைந்த கட்டணத்தில் தொடருந்து!

19 பங்குனி 2024 செவ்வாய் 15:21 | பார்வைகள் : 15130
ஒலிம்பிக் போட்டிகளுக்காக பெல்ஜியத்தில் இருந்து பிரான்சுக்கு குறைந்த கட்டணத்தில் தொடருந்து சேவை ஒன்றை பெல்ஜியம் இயக்க உள்ளது.
ஜூலை 24 ஆம் திகதியில் இருந்து ஓகஸ்ட் 11 ஆம் திகதி வரையும் (நாள் ஒன்றுக்கு இரண்டு சேவைகள்), ஓகஸ்ட் 28 ஆம் திகதியில் இருந்து செப்டம்பர் 8 ஆம் திகதி வரையும் (நாள் ஒன்றுக்கு ஒரு சேவை) இந்த தொடருந்து இயக்கப்பட உள்ளது.
தொடருந்து கட்டணமாக €34 யூரோக்கள் அறவிடப்பட உள்ளது.
பெல்ஜியத்தின் பொது போக்குவரத்து சேவைகளை வழங்கும் SNCB நிறுவனம் இதனை அறிவித்துள்ளது.
முன்னதாக ஒலிம்பிக் போட்டிகளின் போது பரிசில் இருந்து ரென் (Rennes) நகருக்கு குறைந்த விலை Ouigo தொடருந்தினை SNCF அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1