விவசாயிகளுடன் ஜனாதிபதி சந்திப்பு - பிற்போடப்பட்டது!
18 பங்குனி 2024 திங்கள் 15:23 | பார்வைகள் : 12155
விவசாயக்கண்காட்சி (Salon de l'agriculture) இடம்பெற்று, மூன்றாவது வாரத்தில் அவர்களை ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் சந்திப்பார் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த சந்திப்பு பிற்போடப்பட்டுள்ளதாக எலிசே மாளிகை அறிவித்துள்ளது.
விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தமை அறிந்ததே. வீதிகளை முடக்கி, போக்குவரத்தை தடுத்து பெரும் ஆர்பாட்டங்களில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், விவசாயிகளை ஜனாதிபதி சந்திப்பார் என உறுதியளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நேற்று மார்ச் 17 ஆம் திகதி எலிசே மாளிக்கை வெளியிட்ட தகவலின் படி, இந்த சந்திப்பு பிற்போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்திப்பு பிற்போடப்பட்டுள்ளமைக்கு விவசாயிகள் சம்மேளனம் கண்டனம் வெளியிட்டுள்ளது. விரைவில் மீண்டும் நாடு முடக்க போராட்டம் இடம்பெறும் அபாயம் எழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan