Val d'Oise : ஆற்றில் விழுந்த சிறுமிகள்! - ஒருவரைக் காணவில்லை!!
14 பங்குனி 2024 வியாழன் 18:20 | பார்வைகள் : 14376
நேற்று புதன்கிழமை மாலை இரு சிறுமிகள் Oise ஆற்றுக்குள் விழுந்துள்ளனர். ஒருவர் மீட்கப்பட்ட நிலையில், மற்றொரு சிறுமி தொடர்ந்தும் தேடப்பட்டு வருகிறார்.
சம்பவம் தொடர்பில் தெளிவான தகவல்கள் கிடைக்கவில்லை என்றபோதும், மாலை 6.30 மணி அளவில் நதிக்கரையில் நின்றிருந்த இரு சிறுமிகள் ஆற்றில் விழுந்ததாக தெரிவிக்கப்படுகிறது. கடமையில் இல்லாத தீயணைப்பு வீரர் ஒருவர் இச்சம்பவத்தை பார்த்துவிட்டு, ஆற்றில் பாய்ந்து சிறுமிகளை காப்பாற்ற முயற்சித்துள்ளார்.
அவரது முயற்சியால் 5 வயதுச் சிறுமி காப்பாற்றப்பட்டுள்ளார்.
எவ்வாறாயினும் 6 வயதுடைய சிறுமி ஒருவர் தொடர்ந்தும் தேடப்பட்டு வருகிறார்.
உடனடியாக அங்கு படையினர் அழைக்கப்பட்டு தேடுதல் மேற்கொள்ளப்பட்டது. நள்ளிரவு வரை தேடுதல் பணி இடம்பெற்றும் சிறுமி தொடர்பாக தகவல்கள் கிடைக்கவில்லை.
இன்று வியாழக்கிழமை காலை வரையான நிலவரப்படி சிறுமியின் நிலமைகள் தெரியவரவில்லை. இச்சம்பவம் அப்பகுதியில் மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan