XUV 400 EV காரை பிரக்ஞானந்தாவுக்கு பரிசளித்த பிரபல தொழிலதிபர்!
13 பங்குனி 2024 புதன் 09:25 | பார்வைகள் : 6435
செஸ் வீரர் பிரக்ஞானந்தாவுக்கு XUV 400 EV காரை பிரபல தொழிலதிபர் ஒருவர் பரிசாக வழங்கியுள்ளார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் உலகக் கோப்பை 'செஸ்' போட்டியானது அஜர்பைஜானில் நடந்தது.
இந்த போட்டியில் உலகின் முதல்நிலை வீரரான மேக்னஸ் கார்ல்சனுடன் விளையாடிய பிரக்ஞானந்தா 2 -வது இடத்தை பிடித்து சாதனை படைத்தார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பலரும் பிரக்ஞானந்தாவுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
அந்த நேரத்தில் பிரபல தொழிலதிபரும், மஹிந்திரா நிறுவன தலைவருமான ஆனந்த் மஹிந்திரா பிரக்ஞானந்தாவை பாராட்டியதோடு, அவருக்கு கார் ஒன்றை பரிசாக வழங்கப்போவதாகவும் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், செஸ் வீரர் பிரக்ஞானந்தா மற்றும் அவரது பெற்றோரை நேரில் அழைத்து 'Mahindra XUV 400' மின்சார காரை மஹிந்திரா நிறுவன தலைவர் ஆனந்த் மஹிந்திரா பரிசாக அளித்தார்.
அப்போது மகிழ்ச்சியுடன் காரை பெற்றுக்கொண்ட பிரக்ஞானந்தாவின் பெற்றோர், ஆனந்த் மஹிந்திராவுக்கு நன்றியை தெரிவித்தனர்.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan