வெள்ளத்தில் சிக்கி காணாமல் போன நான்கு வயது சிறுமி - மூன்று நாட்களின் பின்னர் சடலம் மீட்பு!!
12 பங்குனி 2024 செவ்வாய் 14:11 | பார்வைகள் : 13873
மார்ச் 9, ஞாயிற்றுக்கிழமை வெள்ளத்தில் சிக்கி காணாம போயிருந்த நான்கு வயது சிறுமியின் உடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக Gard மாவட்ட காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தந்தை மற்றும் அவரது இரு பிள்ளைகளுடன் மகிழுந்து ஒன்று வெள்ளதில் அடித்துச் செல்லப்பட்டிருந்த நிலையில், அவர்கள் தேடப்பட்டு வந்தனர். மகிழுந்து ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், அவர்களை தேடும் பணி பெரும் சிரமங்களுக்கு மத்தியில் இடம்பெற்று வந்த நிலையில், இன்று மார்ச் 12 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை 4 வயதுடைய சிறுமியின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே மகிழுந்தில் அடித்துச் செல்லப்பட்ட 13 வயது சிறுவன் தொடர்ந்தும் தேடப்பட்டு வருகிறார்.
மொத்தமாக ஆறு பேர் இந்த வெள்ளத்தல் சிக்கி பலியாகியுள்ளனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan