Seine-et-Marne : மூதாட்டியை தாக்கி - கொள்ளை!
11 பங்குனி 2024 திங்கள் 15:04 | பார்வைகள் : 13474
மூதாட்டி ஒருவரை தாக்கி கொள்ளையில் ஈடுபட்ட இருவரை Seine-et-Marne மாவட்ட காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
Souppes-sur-Loing (Seine-et-Marne) நகரைச் சேர்ந்த 86 வயதுடைய மூதாட்டி ஒருவரே தாக்கப்பட்டுள்ளார். மாலை 7.30 மணி அளவில் அவர் தனது வீட்டின் அருகே நடந்து சென்றுகொண்டிருந்த நிலையில், அவரை வழிமறித்த இரு கொள்ளையர்கள், தாக்குதலில் ஈடுபட்டனர். அவரை கீழே தள்ளி வீழ்த்தி, அவரிடம் இருந்து €5,000 பணத்தினையும், கைக்கடிகாரம் ஒன்றையும் திருடிக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.
பின்னர் தீயணைப்பு படையினர் அழைக்கப்பட்டு மூதாட்டி மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். மேற்படி கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட இரு நபர்களையும் Seine-et-Marne மாவட்ட காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan