Paristamil Navigation Paristamil advert login

பரிஸ் : நான்கு மீற்றர் ஆழமுடைய கழிவு வாய்க்காலுக்குள் விழுந்த இளைஞன்!

பரிஸ் : நான்கு மீற்றர் ஆழமுடைய கழிவு வாய்க்காலுக்குள் விழுந்த இளைஞன்!

8 பங்குனி 2024 வெள்ளி 12:27 | பார்வைகள் : 19388


19 வயதுடைய இளைஞன் ஒருவர், நேற்று முன்தினம் புதன்கிழமை கழிவுநீர் வாய்க்காலுக்குள் தவறி விழுந்துள்ளார். தீயணைப்பு படையினரின் பலத்த போராட்டத்தின் பின்னர் அவர் மீட்கப்பட்டார்.

மார்ச் 6 ஆம் திகதி புதன்கிழமை மாலை 6.30 மணி அளவில் இச்சம்பவம் 13 ஆம் வட்டாரத்தில் இடம்பெற்றுள்ளது. 19 வயதுடைய குறித்த இளைஞன் குறித்த குழிக்குள் விழுந்து சிக்குண்டுள்ளார். ஆனால் இரண்டு மணிநேரத்தின் பின்னரே அவர் தொடர்பான தகவல்கள் தெரியவந்துள்ளது.

பின்னர் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு படையினர் விரைந்து சென்று அவரை மீட்டனர். முழங்காலில் முறிவு ஏற்பட்டு அவர் Boulevard de l'Hôpital மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மேற்படி சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்