Yvelines : பத்து ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த ஒருவர் - சடலமாக மீட்பு!

8 பங்குனி 2024 வெள்ளி 12:06 | பார்வைகள் : 12232
கடந்த 2014 ஆம் ஆண்டு காணாமல் போன நபர் ஒருவர், பத்து ஆண்டுகளின் பின்னர் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
கடந்த சனிக்கிழமை மூவர் கொண்ட குழுவுக்கு Yvelines மாவட்ட நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்திருந்தது. அவர்கள் மூவரும் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்ட நபரின் கீழ் பணிபுரிந்தவர்கள் எனவும், 2014 ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் திகதி அவர் காணாமல் போயுள்ளார் எனவும், அவர் காணாமல் போனதற்கு மேற்குறித்த மூவரும் காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது.
பின்னர் 2015 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இடம்பெற்ற விசாரணைகளில், குறித்த மூவருக்கும் பல மாதங்களாக ஊதியம் வழங்கவில்லை எனவும், அதையடுத்து ஆத்திரமடைந்த அவர்கள், ‘முதலாளியை’ ஏதேனும் செய்திருக்க கூடும் எனவும் சந்தேகிக்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த பெப்ரவரி 27 ஆம் (2024) திகதி ஆறு பேர் கொண்ட குழுவை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களில் மூவர் மேற்குறித்த சந்தேக நபர்களாவர்.
Le Mesnil-le-Roi (Yvelines) நகரில் உள்ள காட்டுப்பகுதியில் புதைக்கப்பட்டிருந்த நிலையில், ‘முதலாளி’யின் சடலம் மீட்கப்பட்டது. சுண்ணாம்பு தூள் கொட்டி புதைக்கப்பட்டிருந்ததாகவும், அவரது முதுகிலும், தலையிலும் துப்பாக்கியால் சுடப்பட்டு கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட மூவருக்கும் கடந்த சனிக்கிழமை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1