மீண்டும் இணையும் தனுஷ் செல்வராகவன்..!
7 மாசி 2024 புதன் 06:21 | பார்வைகள் : 7144
தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவான வெற்றி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ள நிலையில் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த 2006 ஆம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவான திரைப்படம் ’புதுப்பேட்டை’. இந்த படம் ரிலீஸ் நேரத்தில் சுமாரான வரவேற்பு பெற்றாலும், அதன் பின்னர் சில ஆண்டுகள் கழித்து இந்த படத்தின் தரத்தை உணர்ந்து பொதுமக்கள் தொலைக்காட்சிகளிலும் தியேட்டரிலும் இந்த படத்தை பார்த்து கொண்டாடினார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் 18 ஆண்டுகள் கழித்து ’புதுப்பேட்டை’ படத்தின் இரண்டாம் பாகம் இந்த ஆண்டு உருவாக இருப்பதாக செல்வராகவன் தனது சமூகவலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதையடுத்து இந்த படத்தின் முறையான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதல் பாகத்தில் நடித்த தனுஷ், சினேகா மற்றும் சோனியா அகர்வால் உள்ளிட்டோர் நடித்த நிலையில் இரண்டாம் பாகத்திலும் அவர்கள் இடம் பெறுவார்கள் என்றும் முதல் பாகத்தில் தனுஷ் குப்பைத் தொட்டியில் போட்ட குழந்தை பெரியவனாகி என்ன செய்கிறது என்பது தான் இந்த படத்தின் கதையாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
ஏற்கனவே தனுஷ் பல படங்களில் கமிட்டாகியுள்ள நிலையில் ’புதுப்பேட்டை 2’ படத்திற்கு அவர் எப்போது கால்ஷீட் கொடுப்பார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan