◉ பெப்ரவரி முதல் செப்டம்பர் மாதம் வரை மிக நீண்ட வேலை நிறுத்தம்! - தொடருந்து தொழிற்சங்கம்!
29 தை 2024 திங்கள் 15:02 | பார்வைகள் : 23379
பெப்ரவரி மாதத்தில் இருந்து செப்டம்பர் மாதம் வரை தொடருந்து தொழிலாளர்கள் மிக நீண்ட வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. CGT தொழிற்சங்கம் இதனை அறிவித்துள்ளது.
பெப்ரவரி 5 ஆம் திகதி முதல் செப்டம்பர் 9 ஆம் திகதி வரை இந்த வேலை நிறுத்தம் இடம்பெற உள்ளது. RATP நிறுவனத்தின் தலைவர் Jean Castex இடம் இந்த வேலை நிறுத்த அறிவிப்பினை தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது. 2024 ஆம் ஆண்டில் ஊதிய நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை என தெரிவிக்கப்பட்டு இந்த ஏழு மாத கால வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வருடம் ஒலிம்பிக் போட்டிகள் இடம்பெற உள்ள நிலையில், வேலை நிறுத்தம் புதிய சிக்கலை அரசுக்கு ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan