மோனலிசா ஓவியம் மீது தாக்குதல்! - இரு பெண்கள் கைது!
29 தை 2024 திங்கள் 08:42 | பார்வைகள் : 11354
லூவர் அருங்காட்சியகத்தில் உள்ள மோனலிசா ஓவியம் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இருவரே மேற்படி செயலில் ஈடுபட்டுள்ளனர். ஜனவரி 28 ஆம் திகதி, நேற்று ஞாயிற்றுக்கிழமை லூவர் அருங்காட்சியகத்தின் மோனலிசா ஓவியம் அமைந்திருக்கும் பகுதிக்கு வருகை தந்த இரு பெண்கள், தங்கள் பைகளில் மறைத்துவைத்திருந்த ‘சூப்’ உணவினை மோனலிசா மீது ஊற்றினார்கள்.
மோனலிசா ஓவியம் குண்டு துளைக்காத கண்ணாடிகளினால் பாதுகாப்படுவது அறிந்ததே. ஓவியம் எவ்வித சேதத்துக்கும் உள்ளாகவில்லை.
அனைவருக்கும் சமமான மற்றும் ஆரோக்கியமான உணவுக்கான உரிமைக்காக போராடும் Riposte alimentaire எனும் அமைப்பே மேற்படி செயலில் ஈடுபட்டிருந்தது. விழிப்புணர்வுக்காக, மக்களிடம் செய்தியை கொண்டு சேர்ப்பதற்காக இச்செயலில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அதையடுத்து இரு பெண்களும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
மோனலிசா ஓவியம் தூய்மைப்படுத்தப்பட்டது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
18 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
27 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan