பரிஸ் : பாடகி ஒருவரிடம் இருந்து €100,000 யூரோக்கள் மதிப்புள்ள பயணப்பெட்டி திருட்டு!!
29 தை 2024 திங்கள் 08:31 | பார்வைகள் : 20389
பாடகி ஒருவரிடம் இருந்து €100,000 யூரோக்கள் மதிப்புள்ள பயணப்பெட்டி (valises) திருடப்பட்டுள்ளது. பரிஸ் 16 ஆம் வட்டாரத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மத்திய கிழக்கைச் சேர்ந்த பாடகி Ahlam என்பவரது பயணப்பெட்டியே திருடப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை பரிசுக்கு வருகை தந்த அவர், 16 வட்டாரத்தில் உள்ள வீடொன்றில் தங்கியுள்ளார். அவரது பயணப்பெட்டிகளில் ஒன்றை மேல் தளத்தில் உள்ள வீட்டில் வைத்துவிட்டு, மீண்டும் கீழே இறங்கி வாகனத்தை நெருங்கிய போதே அங்கு வைக்கப்பட்டிருந்த மற்றொரு பெட்டி கொள்ளையிடப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
விலையுயர்ந்த நகைகள், ஆடைகள் மற்றும் சில இலத்திரணியல் பொருட்கள் கொண்ட குறித்த பயணப்பெட்டி காணாமல் போயுள்ளதாக காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். அதையடுத்து 16 ஆம் வட்டார காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பாடகி Ahlam, முன்னதாக கடந்த 2016 ஆம் ஆண்டில் பரிசுக்கு வருகை தந்திருந்த போது, இதே அளவு மதிப்புள்ள ரோலக்ஸ் கைக்கடிகாரம் ஒன்று அவரிடம் இருந்து கொள்ளையிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
18 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
27 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan