◉ தலைநகர் பரிசை காலவரையற்று முடக்க விவசாயிகள் திட்டம்!!

28 தை 2024 ஞாயிறு 09:30 | பார்வைகள் : 14797
நாளை திங்கட்கிழமை முதல் தலைநகர் பரிசை காலவரையற்று முடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகவலை நேற்று சனிக்கிழமை FNSEA (பிரெஞ்சு விவசாயிகள் பாதுகாப்பு சம்மேளனம்) மற்றும் இல் து பிரான்சை தலைமையாக கொண்டு செயற்படும் ‘இளம் விவசாயிகள்’Jeunes Agriculteurs ஆகியவை இணைந்து வெளியிட்டுள்ளன. இவ்விரு அமைப்புகளும் இணைந்து நாளை திங்கட்கிழமை பிற்பகல் 2 மணியில் இருந்து தலைநகரை முற்றுகையிடப்போவதாக திட்டமிட்டுள்ளனர்.
இந்த முற்றுகை காலவரையற்று தொடரும் எனவும் அவர்கள் அறிவித்துள்ளனர்.
பரிசை சூழ இருக்கும் 17 மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் பரிசுக்கு படையெடுத்து வந்து, உழவு இயதிரங்கள் மூலம் அனைத்து வீதிகளையும் ஸ்தம்பிக்க வைக்க உள்ளதாக அறிய முடிகிறது.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1