இன்று Indre-et-Loire நகருக்கு பயணமாகும் பிரதமர்! - மீண்டும் விவசாயிகளுடன் சந்திப்பு!!
28 தை 2024 ஞாயிறு 06:57 | பார்வைகள் : 16234
பிரதமர் கேப்ரியல் அத்தால் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை Indre-et-Loire நகருக்கு பயணிக்க உள்ளார். விவசாயிகளுடன் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்காக அவர் அங்கு பயணிக்க உள்ளதாக அறிய முடிகிறது.
முன்னதாக வெள்ளிக்கிழமை கேப்ரியல் அத்தால் Montastruc-de-Salies (Haute-Garonne) நகருக்கு பயணித்திருந்தார். அங்கு விவசாயிகளுக்கு 10 நலத்திட்டங்கள் கொண்ட அறிவிப்பை வெளியிட்டிருந்தார். ஆனால் அதனை விவசாயிகள் ஏற்றுக்கொள்ளவில்லை.
அந்த சந்திப்பு இடம்பெற்று இரண்டாவது நாளான இன்று ஞாயிற்றுக்கிழமை காலை அவர் Indre-et-Loire நகருக்கு பயணிக்க உள்ளார்.
விவசாயிகள் தங்களது போராட்ட வடிவத்தை மாற்றிக்கொண்டு வருகின்றனர். Rungis சந்தையை முடக்கவும், தலைநகர் பரிசை முடக்கவும் திட்டமிட்டுள்ள நிலையில், அவர்களை சமாதானமாக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan