ஈஃபிள் கோபுர ஊழியர்கள் வேலை நிறுத்தம்!
13 மாசி 2024 செவ்வாய் 14:48 | பார்வைகள் : 9125
ஈஃபிள் கோபுர ஊழியகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். பெப்ரவரி 19 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் இந்த வேலை நிறுத்தம் இடம்பெற உள்ளது.
ஈஃபிள் கோபுரத்தை பராமரிக்கும் SETE நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் தங்களுக்கான ஊழியம் பற்றாக்குறையாக இருப்பதாக தெரிவித்து CGT மற்றும் Force Ouvrière ஆகிய தொழிற்சங்கத்தைச் சேர்ந்த ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.
நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற பொதுக்கூட்டத்தின் போது, வேலை நிறுத்தத்துக்கு ஆதரவாக கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டது.
இந்த வேலை நிறுத்தத்தை அடுத்து, ஒலிம்பிக் போட்டிகள் இடம்பெறும் போதும் வேலை நிறுத்தத்தை தொடர ஊழியர்கள் திட்டமிட்டுள்ளதாக அறிய முடிகிறது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan