கமல் மகளுடன் ஜோடி சேர்ந்த லோகேஷ் கனகராஜ்!
8 மாசி 2024 வியாழன் 13:29 | பார்வைகள் : 7350
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனர் பட்டியலில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருப்பவர் லோகேஷ் கனகராஜ். இன்றைய டாப் ஹீரோக்கள் அனைவரும் இவரது கால்ஷீட்டுக்காக தான் காத்திருக்கிறார்கள். இதற்கு காரணம் இவரின் திறமை தான். இதுவரை தமிழில் மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ என இவர் இயக்கத்தில் வெளிவந்த ஐந்து படங்களுமே பிளாக்பஸ்டர் ஹிட் ஆகின. அடுத்ததாக இவர் கைவசம் ரஜினியின் 171வது படம் உள்ளது.
தற்காலிகமாக தலைவர் 171 என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. வருகிற ஏப்ரல் மாதம் முதல் இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர லோகேஷின் லைன் அப்பில் கைதி 2, ரோலெக்ஸ், இரும்புக்கை மாயாவி, விக்ரம் 2 போன்ற படங்களும் காத்திருக்கின்றன.
இப்படி அடுத்த 5 ஆண்டுகளுக்கு கால்ஷீட் கொடுக்க முடியாத அளவுக்கு படங்களை அடுக்கி வைத்துள்ள லோகேஷ் கனகராஜ், திடீரென ஸ்ருதிஹாசன் உடன் கூட்டணி அமைத்தது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. அதுவும் கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது என அறிவிக்கப்பட்டதால், ஒருவேளை லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஸ்ருதிஹாசன் நடிக்கிறாரா என பல கேள்விகள் எழுந்தன. ஆனால் அதில் ஒரு மிகப்பெரிய டுவிஸ்ட் இருக்கிறது.
அது என்னவென்றால், லோகேஷ் இயக்கத்தில் ஸ்ருதி நடிக்கவில்லை. ஸ்ருதிஹாசன் இயக்கத்தில் தான் லோகேஷ் நடித்துள்ளாராம். ஸ்ருதிஹாசன் இசை மீது ஆர்வம் கொண்டவர் என்பது அனைவரும் அறிந்ததே. இவர் பல்வேறு சுயாதீன இசை ஆல்பங்களையும் வெளியிட்டு இருக்கிறார். அந்த வகையில் காதலர் தினத்திற்காக ஸ்ருதி ஒரு இசை ஆல்பம் பாடலை தயார் செய்துள்ளாராம். அந்த பாடலை ராஜ் கமல் நிறுவனம் தயாரிக்கிறது. ஸ்ருதி சொன்ன கான்செப்ட்டை கேட்டதும் லோகேஷுக்கு பிடித்துப்போக, அவர் உடனடியாக அதில் நடிக்க ஒத்துக்கொண்டாராம். ஸ்ருதி இசையமைத்து, பாடி, இயக்கி உள்ள இந்த ஆல்பத்தில் லோகி நடித்திருக்கிறார். காதலர் தின விருந்தாக இந்த பாடல் வெளியாகும் என கூறப்படுகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
15 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
24 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan