Noisy-le-Grand : காவல்துறையினரின் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி!!
8 மாசி 2024 வியாழன் 06:00 | பார்வைகள் : 20919
காவல்துறையினரின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். 93 ஆம் மாவட்டத்தின் Noisy-le-Grand பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நேற்று புதன்கிழமை இரவு 7.30 மணி அளவில் காவல்துறையினருக்கு தொலைபேசியூடாக அழைத்த பெண் ஒருவர் தான் ஆபத்தில் உள்ளதாக தெரிவித்துள்ளார். அதையடுத்த்து சம்பவ இடத்துக்கு காவல்துறையினர் விரைந்து சென்றனர்.
அங்கு பெண் ஒருவர் அவரது கணவரால் துப்பாக்கி மூலம் அச்சுறுதலுக்கு உள்ளாகியுள்ளார். காவல்துறையினர் வீட்டுக்குள் நுழைந்த போது, அவரது கணவர் காவல்துறையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் காவல்துறை வீரர் ஒருவர் காயமடைந்தார்.
அதையடுத்து காவல்துறையினர் குறித்த நபரை துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தினர். இச்சம்பவத்தில் அவர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டார்.
காயமடைந்த காவல்துறை வீரர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan