இல் து பிரான்சுக்குள் புதிய ஐந்து இரவு நேர பேருந்து சேவைகள்!

3 தை 2024 புதன் 07:00 | பார்வைகள் : 14445
இல் து பிரான்சுக்குள் புதிதாக ஐந்து இரவுநேர தொடருந்து சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
Noctilien என அழைக்கப்படும் இந்த பேருந்து சேவைகள், இல் து பிரான்சுக்குள் உள்ள தொடருந்து நிலையங்களுக்கிடையே பயணிக்கும் இரவுநேர சேவைகளாகும். 123, 147, 160, 162 மற்றும் 161 ஆகிய இலக்கங்கள் கொண்ட இந்த புதிய சேவை, Yvelines, Val-d'Oise மற்றும் Essonne ஆகிய மாவட்டங்களில் ஜனவரி 1 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இரவு நேர பயணங்கள் அதிகரித்துள்ள நிலையில், தேவைகருதி மேலதிகமான ஐந்து சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக Île-de-France Mobilités தெரிவித்துள்ளது.
இல் து பிரான்சுக்குள் இரவு நேர பேருந்துகளைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை கடந்த ஏழு ஆண்டுகளில் 30% சதவீதமாக உயர்ந்துள்ளதாக புள்ளிவிபரம் ஒன்று தெரிவிக்கிறது.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1