Pas-de-Calais மாவட்டத்துக்கு சிவப்பு எச்சரிக்கை! - வெள்ளம் காரணமாக நாட்டின் பாதிக்கும் மேற்பட்ட மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

2 தை 2024 செவ்வாய் 18:58 | பார்வைகள் : 11103
வெள்ளம் காரணமாக பா து கலே மாவட்டத்துக்கு அதிகபட்ச எச்சரிக்கையான ‘சிவப்பு’ நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், Finistère, Nord மற்றும் Meurthe-et-Moselle ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்தோடு, தலைநகர் பரிஸ், இல் து பிரான்ஸ் மாகாணம் உட்பட நாட்டின் பாதிக்கும் மேற்பட்ட மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
Pas-de-Calais மற்றும் Nord மாவட்டங்களில் நேற்று முதல் தொடர் மழை பெய்து வருகிறது. Pas-de-Calais மாவட்டத்தில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வீதிகள் மூடப்பட்டுள்ளன. 120 தீயணைப்பு படையினர் களத்தில் தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1