அனைத்து சட்டங்களையும் உடனடியாக நடைமுறைப்படுத்த ஜனாதிபதி மக்ரோன் அழைப்பு!!
26 தை 2024 வெள்ளி 03:03 | பார்வைகள் : 15120
குடிவரவு சட்டத் திருத்தம் தொடர்பாக அரசியலமைப்புச் சபையினரால் (Conseil constitutionnel) ஏற்றுக்கொள்ளப்பட்ட அனைத்து சட்டங்களையும் உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தனது அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
நாளை ஜனவரி 26, வெள்ளிக்கிழமை இந்தியாவில் இடம்பெற உள்ள குடியரசு தின நிகழ்வில் பங்கேற்பதற்காக இந்தியா சென்றடைந்துள்ள ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன், அங்கு வைத்தே இதனைத் தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்புச் சபையினரால் வழங்கப்பட்ட முடிவுகளை அரசு மிக நெருக்கமாக கவனிக்கிறது. பிரான்ஸ் மற்றும் அதன் கடல்கடந்த நிர்வாகப்பிரிவு அனைத்திலும் உடனடியாக இந்த சட்டங்கள் நடைமுறைக்கு கொண்டுவரப்பட வேண்டும் என ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தனது அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டுள்ளதாக அறிய முடிகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan