சுவிட்சர்லாந்து ஆற்று நீரில் கிருமிகள்! அதிர்ச்சிதகவல்
28 ஆடி 2023 வெள்ளி 09:33 | பார்வைகள் : 16465
சுவிட்சர்லாந்தை ஒட்டியுள்ள பிரான்சின் Gaillard நகரில் அமைந்துள்ள நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட கழிவு நீர் சுவிட்சர்லாந்திலுள்ள Arve மற்றும் Rhône நதிகளில் கலந்தது.
ஜூன் மாதம் 12 ஆம் திகதி, ஆற்று நீரில் நீந்துதல், துடுப்பு வலிக்கும் சிறுபடகு ஓட்டுதல் ஆகிய விடயங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆற்று நீரில் கழிவுநீர் கலந்ததால், மலத்தில் காணப்படும் ஈ.கோலை என்னும் மிக அதிக அளவில் இருந்தது பரிசோதனைகளில் தெரியவந்துள்ளத.
அதனை தொடர்ந்தே கட்டுப்பாடுகள் கடுமையாக விதிக்கப்பட்டன.
இந்நிலையில், இம்மாதம் 26ஆம் திகதி, அதாவது, கடந்த செவ்வாய்க்கிழமை, ஆற்று நீரில் பல மாதிரிகள் எடுக்கப்பட்டு அவற்றில் கிருமிகள் எந்த அளவுக்கு உள்ளன என்பது பரிசோதிக்கப்பட்டது.
புதனன்று பரிசோதனை முடிவுகள் வெளியாகின. பரிசோதனை முடிவுகளில், ஆற்று நீரில் ஈ.கோலை கிருமியின் அளவு குறைந்து, அனுமதிக்கப்பட்ட அளவிலேயே இருப்பது தெரியவந்துள்ளது.
ஆகவே, ஆற்று நீரில் நீந்துவது முதலான விடயங்கள் தொடர்பில் விதிக்கப்பட்டிருந்த தடை தற்போது நீக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan