பரிஸ் : நள்ளிரவில் வீதியில் இருந்து மீட்கப்பட்ட மூன்று வயது சிறுமி!!
23 தை 2024 செவ்வாய் 15:04 | பார்வைகள் : 20275
மூன்று வயது சிறுமி ஒருவர் நேற்று திங்கட்கிழமை நள்ளிரவு வீதி ஒன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளார்.
பரிஸ் 19 ஆம் வட்டாரத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. rue Compans வீதியில் குறித்த மூன்று வயது சிறுமி தனித்து நின்ற நிலையில், இரவு 11.30 மணி அளவில் அருகில் வசிக்கும் சிலர் கண்டுபிடித்தனர். இச்சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உடனடியாக காவல்துறையினர் அழைக்கப்பட்டனர்.
கடுமையான குளிர் நிலவியிருந்த போதும், சிறுமி எவ்வித உடல்நலக்குறைவுக்கும் உள்ளாகவில்லை.
குறித்த சிறுமி அருகில் உள்ள கட்டிம் ஒன்றில் பெற்றோருடன் வசித்த நிலையில், பெற்றோர் அறியாத வண்ணம் அவர் பாரம்தூக்கி மூலமாக அங்கிருந்து கீழே இறங்கி, வீதிக்கு வருகை தந்ததாக அறிய முடிகிறது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan