மதுபோதையில் குழப்பம் விளைவித்த மக்ஸ்வெல் வைத்தியசாலையில் அனுமதி
23 தை 2024 செவ்வாய் 09:53 | பார்வைகள் : 6290
அவுஸ்திரேலிய அணியின் சகலதுறை வீரர் கிளென்மக்ஸ்வெல் ஹோட்டலொன்றில் இடம்பெற்ற சம்பவத்தை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதேவேளை இந்த சம்பவம் குறித்து அவுஸ்திரேலிய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
மதுபோதை காரணமாக இடம்பெற்ற சம்பவத்தை தொடர்ந்தே மக்ஸ்வெல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அடிலெய்டில் பிரெட்லீ கலந்துகொண்ட இசைநிகழ்ச்சியொன்றை பார்வையிடுவதற்கு மக்ஸ்வெல் சென்றிருந்தார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
என்ன நடந்தது என்பது குறித்த விபரங்கள் முழுமையாக வெளியாகாத போதிலும் அம்புலன்ஸ் அழைக்கப்பட்டது மக்ஸ்வெல் மருத்துவமனைக்கு அதில் அழைத்துசெல்லப்பட்டார் என்பது உறுதியாக தெரியவந்துள்ளது.
மெல்பேர்ன் ஸ்டார் அணியின் பிபிஎல் போட்டிகளின் பின்னர் மக்ஸ்வெல் அடிலெய்டில் பிரபலங்களின் கோல்ப் போட்டிகளிற்காக தங்கியிருந்தார்.
இதேவேளை மேற்கிந்திய அணிக்கு எதிராக விளையாடவுள்ள அவுஸ்திரேலிய அணியிலிருந்து கிளென் மக்ஸ்வெல் நீக்கப்பட்டுள்ளார்.
எனினும் இதற்கும் அடிலெய்ட் சம்பவத்திற்கும் தொடர்பில்லை என அவுஸ்திரேலிய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை தெரிவித்துள்ளது.
வாரஇறுதியில் இடம்பெற்ற சம்பவம் குறித்து அறிந்துள்ளோம் மேலதிக தகவல்களை கோரியுள்ளோம் என அவுஸ்திரேலிய கிரிக்கெட் தெரிவித்துள்ளது.
தலைசுற்றுபோன்ற ஒன்றினால் மக்ஸ்வெல் பாதிக்கப்பட்டாரா என்பதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளில் அவுஸ்திரேலிய கிரிக்கெட் கட்டுப்பாடடுச்சபையின் மருத்துவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
மக்ஸ்வெலிற்கு ஏற்கனவே இவ்வாறான பாதிப்பு உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
நடந்த சம்பவம் குறித்து மக்ஸ்வெல் அவமானமடைந்தவராக உணர்கின்றார் என அவரது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
அவர் சனிக்கிழமை வலி மற்றும் வேதனையால் பாதிக்கப்பட்டார் மீண்டும் மெல்பேர்னிற்கு சென்று அவர் பயிற்சிகளை ஆரம்பித்துள்ளார் என முகாமையாளர் தெரிவித்துள்ளார்
🔥 இன்றைய சிறப்பு சலுகை
18 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
27 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan