தேர்தலுக்கு தயாராகிறது திமுக ! கூட்டணி பேச்சு நடத்த தனிக்குழு
19 தை 2024 வெள்ளி 13:37 | பார்வைகள் : 10602
சில மாதங்களில் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதற்கான கூட்டணி பேச்சு நடத்துவதற்கான குழுவையும், தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்கான குழுவையும் திமுக அறிவித்துள்ளது.
இன்னும் சில மாதங்களில் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக ஒவ்வொரு கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தையை இப்போதே துவங்கிவிட்டன. அந்த வகையில் திமுக சார்பில் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவதற்கான குழு, லோக்சபா தேர்தல் ஒருங்கிணைப்பு குழு, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு ஆகியவற்றை திமுக அறிவித்துள்ளது.
அதன்படி, டி.ஆர்.பாலு தலைமையிலான கூட்டணி பேச்சு நடத்தும் குழுவில் அமைச்சர்கள் கே.என்.நேரு, பெரியசாமி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் பொன்முடி, திமுக எம்.பி., ஆ.ராசா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவில், கே.என்.நேரு, ஆர்.எஸ்.பாரதி, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
திமுக எம்.பி., கனிமொழி தலைமையிலான தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவில்,
டி.கே.எஸ்.இளங்கோவன், ஏ.கே.எஸ்.விஜயன், பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன், டி.ஆர்.பி.ராஜா, கோவி.செழியன், கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், எழிலரசன், எம்.எம்.அப்துல்லா, எழிலன் நாகநாதன், சென்னை மேயர் பிரியா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இக்குழுவில் திருச்சி சிவாவும் சேர்க்கப்பட்டு உள்ளார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
15 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
24 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan