Paristamil Navigation Paristamil advert login

ஹமாஸ் மீதான போர் - பட்ஜெட்டில் கூடுதலாக நிதி ஒதுக்கிய இஸ்ரேல்

ஹமாஸ் மீதான போர் - பட்ஜெட்டில் கூடுதலாக நிதி ஒதுக்கிய இஸ்ரேல்

17 தை 2024 புதன் 08:04 | பார்வைகள் : 10782


ஹமாஸ் அமைப்பின் மீதான தாக்குதலுக்கு எதிராக பல இஸ்லாமிய நாடுகள் இஸ்ரேல் மீது எச்சரிக்கையை விடுத்து வருகின்றது.

இந்நிலையில் ஹமாசுக்கு எதிரான போருக்காக, இஸ்ரேலியப் பெறுமதிக்கமைய பட்ஜெட்டில் ஒரு லட்சத்து 24 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கும் சட்டத் திருத்த‌திற்கு இஸ்ரேல் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

ஹமாசுக்கு எதிரான போர் நூறு நாட்களை கடந்துள்ள நிலையில், பட்ஜெட்டில் கூடுதலாக நிதி ஒதுக்குவதற்கான சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டது.

இதுகுறித்து, அமைச்சரவையில் 24 மணி நேரத்திற்கும் மேலாக விவாதம் நடைபெற்றது.

இறுதியில், நடப்பு ஆண்டு போருக்காக மட்டும் 15 பில்லியன் அமெரிக்க டாலர் நிதி ஒதுக்குவதற்கான சட்டத் திருத்த‌த்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.  

வர்த்தக‌ விளம்பரங்கள்