நைஜீரியாவில் ஆற்றுக்குள் படகு கவிழ்ந்து 100 பேர் மாயம்

17 தை 2024 புதன் 07:56 | பார்வைகள் : 8712
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் ஆற்றுக்குள் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
சுமாா் 100 பேர் மாயமாகி உள்ளதாக கூறப்படும் நிலையில் விபத்துப் பகுதியில் இருந்து 8 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.
நைஜீரியா போர்கு பகுதியிலிருந்து கெப்பி மாகாணத்திலுள்ள சந்தைப் பகுதியை நோக்கி நைஜர் ஆற்றின் வழியாக அந்தப் படகு திங்கள்கிழமை சென்றுகொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டது.
அளவுக்கு அதிகமான ஆள்களையும், சுமைகளையும் ஏற்றிச் சென்றதால், அந்தப் படகு கவிழ்ந்ததாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்நிலையில் காணாமல் போனோரை தேடும் பணி முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1