Paristamil Navigation Paristamil advert login

சர்ச்சையில் சந்தானம்!

சர்ச்சையில் சந்தானம்!

16 தை 2024 செவ்வாய் 07:05 | பார்வைகள் : 11759


நடிகர் சந்தானம் பொங்கல் வைத்து வழிபாடு நடத்திய விடியோவை சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் பகிர்ந்தார். அந்த விடியோவுடன், “நான் அந்த ராமசாமி இல்லை” என பெரியாரைக் குறிப்பிடுவதுபோல் பதிவிட்டிருந்தார். 

இதனைக் கண்ட பலர், சந்தானத்தைக் கடுமையாக விமர்சித்தனர். இதனால், அதிர்ச்சியடைந்தவர் அப்பதிவை நீக்கியுள்ளார். 

சந்தானத்தின் புதிய திரைப்படமான ‘வடக்குப்பட்டி ராமசாமி’ பிப்.2 ஆம் தேதி திரைக்கு வருகிறது. சந்தானத்துக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். இப்படத்தை கார்த்திக் யோகி எழுதி இயக்கியுள்ளார். 

வர்த்தக‌ விளம்பரங்கள்