GOAT திரைப்படத்தின் புதிய புகைப்படம் வெளியானது!
15 தை 2024 திங்கள் 10:36 | பார்வைகள் : 6247
நடிகர் விஜய் நடிப்பில் ’GOAT’ படம் உருவாகி வருகிறது. வெங்கட்பிரபு இயக்கும் இந்தப் படத்தில் நடிகர்கள் ஜெயராம், மோகன், பிரபுதேவா, பிரஷாந்த், சிநேகா, லைலா என பலரும் சேர்ந்து நடிக்கின்றனர். விஜயின் தொண்ணூறுகளின் காலக்கட்டத்தில் இருந்த நடிகர்கள் இவருடன் மீண்டும் திரையில் ஒன்று சேர்வது ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது. படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி செளத்ரி நடிக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்தப் படத்தில் நடிகர் விஜய் அப்பா-மகன் என இரண்டு கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதில் விஜயின் இளவயதுக்கான போர்ஷன் படமாக்கப்பட்டு வருகிறது.
படப்பிடிப்பு தளத்தில் நடிகர் விஜய் ரசிகர்களுடன் செல்பி எடுத்த வீடியோக்களும் புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகியது. இந்த நிலையில் தான் நடிகர் விஜய் நடிகர்கள் பிரபுதேவா, பிரஷாந்த் மற்றும் அஜ்மல் மூவருடன் துப்பாக்கி ஏந்தியபடி சிரித்துக் கொண்டிருக்கும் படியான புது போஸ்டர் ஒன்று வெளியாகி உள்ளது. இதை நடிகர் விஜய் தனது சமூக வலைதளங்களில் பகிர்ந்து ரசிகர்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆக்ஷன் மோடில் படம் உருவாகி வருகிறது என்பதை தான் முன்பு வெளியான போஸ்டர்கள் காட்டியது. ஆனால் தற்பொழுது பொங்கல் பண்டிகை என்பதால் மகிழ்ச்சியாக இருக்கும் படியான ஒரு போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
17 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
26 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan