விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் பிரிந்து விடுவார்களா?
14 தை 2024 ஞாயிறு 12:54 | பார்வைகள் : 7080
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் பிரிந்து விடுவார்கள் என பிரபல ஜோதிடர் கணித்துள்ள தகவல்கள் வெளியாகியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஆந்திரா, தெலங்கானா ஆகிய தெலுங்கு மாநிலங்களில் உள்ள திரைப்பட நட்சத்திரங்கள் மற்றும் அரசியல்வாதிகள் உட்பட நட்சத்திரப் பிரபலங்களின் எதிர்காலத்தை கணித்துச்சொல்லி புகழ் பெற்றவர் யூடியூபர் வேணு சுவாமி, நடிகர் நாக சைதன்யா மற்றும் சமந்தாவின் திருமண வாழ்க்கையில் குழப்பம் இருப்பதாகவும் அவர்கள் பிரிந்து விடுவார்கள் என்றும் சரியாக கூறி மக்களின் கவனத்தை ஈர்த்தார்.
அந்த வேணு சுவாமி தற்போது நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் எதிர்காலத்தில் பிரிந்து விடுவார்கள் என்று கணித்துக் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் 20 ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவர் தமிழில் ரஜினிகாந்த், விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, விக்ரம் என முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். இதேபோல மலையாளம், தெலுங்கிலும் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.
சமீபத்தில் பாலிவுட்டில் ஷாருக்கானுடன் இணைந்து ஜவான் படத்தில் நடித்திருந்தார். இயக்குநர் அட்லி இயக்கத்தில் வெளியான இத்திரைப்படம் 1000 கோடி வசூல் சாதனை செய்தது. இவரது நடிப்பில் இறுதியாக அன்னபூரணி திரைப்படம் வெளியாகியிருந்தது. இப்படத்தில் இவருடன் இணைந்து நடிகர் ஜெய் நடித்திருந்தார்.
இயக்குநர் விக்னேஷ் சிவனைக் காதலித்து திருமணம் செய்திருக்கும் இவர், கடந்த ஆண்டு வாடகைத் தாய் மூலம் இரண்டு குழந்தைகளையும் பெற்றெடுத்திருந்தார். இந்நிலையில், நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் வருங்காலத்தில் பிரிய வாய்ப்புள்ளதாக பிரபல ஜோதிடர் வேணு சுவாமி தெரிவித்துள்ளார்.
நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் அடுத்தடுத்த சர்ச்சைகளிலும் பிரச்சினைகளிலும் சிக்கிவரும் நிலையில், அவர்களுக்கு இது நல்லதல்ல என்று கூறியுள்ள வேணு சுவாமி, இதன் காரணமாக கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு அவர்கள் இருவரும் எதிர்காலத்தில் பிரிந்து விடுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.
தான் கணித்துக் கூறியது எதுவும் நடக்கவில்லை என்றால் தனது தொழிலை விட்டு விலகுவதாக சபதம் செய்துதான் இவர் ஒவ்வொன்றையும் கூறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
17 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
26 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan