Paristamil Navigation Paristamil advert login

Yvelines : உரிமையாளரைக் கட்டிவைத்துவிட்டு நகைகளைக் கொள்ளையிட்ட திருடர்கள்!

Yvelines : உரிமையாளரைக் கட்டிவைத்துவிட்டு நகைகளைக் கொள்ளையிட்ட திருடர்கள்!

10 தை 2024 புதன் 14:32 | பார்வைகள் : 9489


கடந்த ஜனவரி 8 ஆம் திகதி திங்கட்கிழமை, Versailles (Yvelines) நகரில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்த கொள்ளையர்கள், வீட்டின் உரிமையாளரை கட்டி வைத்துவிட்டு கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.

நகைகள் மற்றும் தோலினால் செய்யப்பட்ட விலையுயர்ந்த பொருட்களை அவர்கள் திருடிச் சென்றுள்ளனர். வீட்டுக்குள் நுழைந்த திருடர்களை வீட்டின் உரிமையாளர் தடுக்க முற்பட்டார். காவல்துறையினருக்கு அழைப்பு எடுக்கவும் முற்பட்டார். ஆனால் அதற்குள்ளாக அவரை கொள்ளையர்கள் இணைந்து தாக்கி, கட்டி வைத்துவிட்டு அங்கிருந்த பொருட்களைக் கொள்ளையிட்டுள்ளனர்.

கொள்ளையிடப்பட்ட பொருட்களின் மதிப்பு தொடர்பில் தெரிவிக்கப்படவில்லை. விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்