போர்க்கப்பலை தாக்க வந்ததாக சந்தேகிக்கப்படும் ட்ரோன் விமானங்கள்! - சுட்டு வீழ்த்திய பிரான்ஸ்!!
11 மார்கழி 2023 திங்கள் 06:04 | பார்வைகள் : 13637
பிரான்சுக்கு சொந்தமான போர்க்கப்பல் ஒன்றை தாக்க வந்ததாக சந்தேகிக்கப்படும் ட்ரோன் விமானங்கள் இரண்டை பிரெஞ்சு இராணுவத்தினர் சுட்டு வீழ்த்தியுள்ளனர்.
யேமன் கடற்கரையில் இருந்து 110 கிலோமீற்றர் தூரத்தில் செங்கடலில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள Languedoc எனும் கப்பல் மீதே இந்த தாக்குதல் முயற்சி இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமை இரவு குறித்த விமானத்தை நோக்கி இரண்டு ட்ரோன் (ஆளில்லா விமானங்கள்) பறந்து வருவதை கண்ட இராணுவத்தினர், அதனைச் சுட்டு வீழ்த்தினர்.
குறித்த ட்ரோன் விமானங்கள் ஹூதி (Houthi ) என அழைக்கப்படும் ஒரு இஸ்லாமிய அமைப்பினரால் அனுப்பப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. காஸா பகுதி மக்களுக்கான உதவும் நோக்கோடு அங்கு நிறுத்திவைக்கப்பட்டுள்ள குறித்த கப்பலில், பல காஸா பகுதி மக்கள் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan