பெற்றோர்களை தீவைத்து எரித்துக் கொன்ற 15 வயது மகன் கைது!!
4 மார்கழி 2023 திங்கள் 10:43 | பார்வைகள் : 14767
பிரான்சின் தென்கிழக்கு பகுதியான Châteauvilain (Isère) நகரில் கடந்த நவம்பர் 26 ஆம் திகதி வீடொன்றில் இருந்து இரு சடலங்கள் மீட்கப்பட்டிருந்தன.
முற்றாக எரிந்து சேதடமைடந்த வீட்டின் இடிபாடுகளிலிருந்து 58 வயதுடைய ஒருவர் மற்றும் அவருடைய மனைவி 52 வயதுடைய மனைவி ஆகியோரது சடலங்கள் மீட்கப்பட்டிருந்தது.
முதலில் தீ விபத்து என சந்தேகிக்கப்பட்ட இச்சம்பவம் பின்னர் விசாரணைகளிலும், உடற்கூறு பரிசோதனைகளிலும் பல அதிர்ச்சி தகவல்கள் தெரியவந்தன.
சடலங்களாக மீட்கப்பட்ட இருவரது உடலங்களிலும் துப்பாக்கி குண்டு பாய்ந்திருந்த தடயங்கள் இருந்ததாகவும், அவர்களை சுட்டுக்கொன்றுவிட்டு வீடு எரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
மேலும் அதிர்ச்சியளிக்கும் விதமாக இச்செயல்களில் ஈடுபட்டிருந்தது அவர்களுடைய 15 வயதுடைய மகன் எனவும் தெரியவந்துள்ளது.
பின்னர் குறித்த மகன் கடந்த சனிக்கிழமை Montpellier நகரில் வைத்து காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளான். மேற்படி செயலில் ஈடுபட்டமைக்குரிய காரணம் குறித்து அறிய முடியவில்லை.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan