Viry-Châtillon : மோட்டார் சைக்கிளில் பயணித்தவரிடம் கொள்ளையிட்ட இரு சிறுவர்கள் கைது!!
2 மார்கழி 2023 சனி 10:00 | பார்வைகள் : 10426
மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவரை தாக்கி அவரிடம் கொள்ளையிட்ட இரு சிறுவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
நவம்பர் 29ஆம் திகதி புதன்கிழமை இச்சம்பவம் Viry-Châtillon (Essonne) நகரில் இடம்பெற்றுள்ளது. 30 வயதுடைய ஒருவரே தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார். அன்று இரவு மோட்டார் சைக்கிளில் வீடு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த ஒருவரை வழிமறித்த இரு சிறுவர்கள், அவரை தாக்கியுள்ளனர். பின்னர் அவரிடம் இருந்து தொலைபேசி பணம் போன்றவற்றை கொள்ளையிட்டுள்ளனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
தலையில் காயமடைந்த அவர் மயங்கி விழுந்து, சில நிமிடங்களின் பின்னர் காவல்துறையினரை அழைத்துள்ளார்.
பின்னர் அவர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். ஒரு மணிநேரத்தின் பின்னர் கொள்ளையில் ஈடுபட்ட இரு 16 மற்றும் 17 வயதுடைய இரு சிறுவர்களும் கைது செய்யப்பட்டனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan