Samuel Paty எனும் பெயர் கொண்ட மற்றுமொரு ஆசிரியருக்கு கொலை மிரட்டல்!!
2 மார்கழி 2023 சனி 09:00 | பார்வைகள் : 10838
கடந்த 2020 ஆம் ஆண்டு பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட Samuel Paty எனும் ஆசிரியரது பெயரைக் கொண்ட மற்றுமொரு ஆசிரியருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 30 ஆம் திகதி இந்த கொலை மிரட்டல் Charente நகரில் உள்ள உயர்கல்வி பாடசாலை ஒன்றில் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவருக்கு விடுக்கப்பட்டுள்ளது. மாணவன் ஒருவன் குறித்த ஆசிரியருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளான். Samuel Paty எனும் பெயர் காரணமாக இந்த மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தை அடுத்து குறித்த மாணவன் பாடசாலையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த மாணவன் படிப்பை பாதியில் நிறுத்திய இளைஞர்களுக்காக ஒதுக்கப்பட்ட பிரிவில் படித்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
**
கடந்த 2020 ஆம் ஆண்டு ஒக்டோபர் 16 ஆம் திகதி Samuel Paty எனும் வரலாற்று பாடம் கற்பிக்கும் பேராசியர் ஒருவர் Conflans-Sainte-Honorine (Yvelines) நகரில் உள்ள கலூரியில் வைத்து கொல்லப்பட்டார். 18 வயதுடைய பயங்கரவாதி உடனடியாக காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டான்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan