இருபதாவது தடவையாக 49.3 ஐ பயன்படுத்திய பிரதமர்!
2 மார்கழி 2023 சனி 08:00 | பார்வைகள் : 11049
பிரதமர் Élisabeth Borne , இருபதாவது தடவையாக 49.3 எனும் அரசியலமைப்பு சட்டத்தை பயன்படுத்தியுள்ளார். இந்த சர்ச்சைக்குரிய சட்டம் பயன்படுத்துவது தொடர்பில் மக்ரோனின் அரசாங்கம் மீது எதிர்க்கட்சிகள் பல தடவைகள் நம்பிக்கை இல்லா பிரேரணை கொண்டுவந்திருந்தனர்.
2024 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டத்தின் ஒரு பகுதியான ”சமூக பாதுகாப்பு” அறிக்கையை (budget de la Sécurité sociale) நேற்று வெள்ளிக்கிழமை நண்பகல் பாராளுமன்றத்தில் பிரதமர் Élisabeth Borne வாசித்தார். வாக்குகள் இன்றி அதனை நிறைவேற்றுவதற்காக மேற்படி 49.3 எனும் அரசியலமைப்பு சட்டத்தினை அவர் பயன்படுத்தியிருந்தார். இதனால் அங்கு பெரும் கூச்சல் குழப்பம் எழுந்தது.
முன்னதாக பல தடவைகள் மக்ரோனின் அரசாங்கம் மீது நம்பிக்கை இல்லா பிரேரணை கொண்டுவரப்பட்டு - பாராளுமன்றத்தில் வாக்கெடுக்கப்பட்டிருந்தது. இம்முறை மீண்டும் நம்பிக்கை இல்லா பிரேரணை கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan