பரிஸ் : வீதி வீதியாக சுவரொட்டிகளை நிறைத்த அமெரிக்க உணவகம்! - குற்றப்பணம்!!
30 கார்த்திகை 2023 வியாழன் 07:00 | பார்வைகள் : 13399
பரிசில் விரைவில் திறக்கப்பட உள்ள அமெரிக்க உணவகம் ஒன்று, பரிசின் வீதிகளில் சுவரொட்டிகளை ஒட்டி விளம்பரப்படுத்தியுள்ளது. இந்த சுவரொட்டிகள் ஒட்டியமைக்காக குற்றப்பணம் அறவிடப்பட உள்ளது.

அமெரிக்காவின் donuts Krispy Kreme நிறுவனம் முதன்முதலாக பிரான்சில், குறிப்பாக பரிசில் தனது முதலாவது கிளையை வரும் டிசம்பர் 6 ஆம் திகதி திறக்க உள்ளது. அவர்களது வருகையை சுவரொட்டிகள் மூலம் விளம்பரப்படுத்தி வருகிறனர். வீதி வீதியாக விளம்பரப்படுத்தி வருகின்றனர்.
(மகரூன் உணவுக்கு இனி வேலை இல்லை. சிறந்த குரோசண்ட் உணவு பரிசுக்கு வருகை தந்துள்ளது” என அர்த்தப்படும் விதமாக ("Macaron démission! - "le meilleur croissant de Paris", "Ça aurait été plus logique d'ouvrir à Trouville") பல வாசகங்களை தாங்கிக்கொண்டு இந்த சுவரொட்டிகள் பரிசின் பல வீதிகளில் காணக்கூடியதாக உள்ளது.
இந்த சுவரொட்டிகள் அனுமதிக்கு மீறிய விளம்பரமாக காட்சியளிப்பதால் பரிசின் துணை முதல்வர் Emmanuel Grégoire, குறித்த நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க உள்ளதாக தெரிவித்தார்.
சுவரொட்டிகளை அகற்றி சுத்தப்படுத்தும் பணிகளை மேற்கொள்ளுவதற்காக பெரும் குற்றப்பணம் ஒன்று அறவிடப்பட உள்ளதாகவும், சுவரொட்டி ஒன்றுக்கு ₤1,500 யூரோக்கள் வீதம் குற்றப்பணம் அறவிடப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.

🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan