ISPL T10 தொடர்- சென்னை கிரிக்கெட் அணியை வாங்கிய நடிகர் சூர்யா
28 மார்கழி 2023 வியாழன் 03:35 | பார்வைகள் : 5899
சென்னை கிரிக்கெட் அணியை விலைக்கு வாங்கியுள்ளதாக நடிகர் சூர்யா ட்விட்டர் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.
மக்கள் மத்தியில் டி20 ப்ரீமியர் லீக் போட்டிகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இந்த போட்டிகளை சுவாரஸ்யமாக நடத்த வேண்டும் என்று உலகம் முழுவதும் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றனர்.
அந்தவகையில், இங்கிலாந்தில் 100 பந்துகளை கொண்ட 'The Hundred' என்ற கிரிக்கெட் தொடர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதே போல, ஐக்கிய அரபு அமீரகத்தில் T10 என்ற பெயரில் 10 ஓவர்களுக்கான தொடர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதே போல தான் இந்தியாவிலும் ISPL T10 என்ற பெயரில் கிரிக்கெட் தொடரை CCS Sports LLP எனும் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
வரும் மார்ச் 2 முதல் மார்ச் 9 -ம் திகதி வரை மொத்தம் 19 போட்டிகள் நடைபெறவிருக்கும் இந்த கிரிக்கெட் தொடரில் சென்னை, ஹைதராபாத், பெங்களூரு, மும்பை, கொல்கத்தா மற்றும் ஸ்ரீநகர் ஆகிய ஆறு அணிகள் பங்கேற்கின்றன.
இந்த தொடரில் பங்கேற்கும் கிரிக்கெட் அணிகளை சினிமா பிரபலங்கள் வாங்கி வருகின்றனர்.
அந்த வகையில், மும்பை அணியை அமிதாப் பச்சனும், பெங்களூரு அணியை பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷனும், ஸ்ரீநகர் அணியை அக்ஷய் குமாரும், ஹைதராபாத் அணியை தெலுங்கு நடிகர் ராம்சரணும் வாங்கி உள்ளனர்.
தற்போது இந்த வரிசையில் சென்னை கிரிக்கெட் அணியை நடிகர் சூர்யா வாங்கியுள்ளார். அதை அவர், தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில் உறுதி செய்துள்ளார். இன்னும் கொல்கத்தா அணியின் உரிமையாளர் விவரம் மட்டும் வெளியாகாமல் உள்ளது.
18 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
27 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan