Eurostar : மூன்று நாட்களுக்கு மேலதிகமாக 10,000 இருக்கைகள்!
22 மார்கழி 2023 வெள்ளி 12:28 | பார்வைகள் : 12341
நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற திடீர் வேலை நிறுத்தம் காரணமாக பிரித்தானியாவுக்கான Eurostar தொடருந்து சேவைகள் தடைப்பட்டது. அதையடுத்து அடுத்து வரும் மூன்று நாட்களுக்கு மேலதிகமான இருக்கைகள் தொடருந்தில் வழங்கப்பட உள்ளன.
கிறிஸ்மஸ் விடுமுறை ஆரம்பமாக உள்ள நிலையில், நேற்றைய தினம் பாதிக்கப்பட்ட பணிகளுக்கானவும், தொடர்ந்து பயணப்பட காத்திருக்கும் பயணிகளுக்காகவும் இந்த மேலதிக இருக்கைகள் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, பாதிக்கப்பட்ட பணிகள் எவ்வித மேலதிக கட்டணங்களும் இன்றி பயணச்சிட்டைகளை மாற்றிக்கொள்ளவும், இரத்துச் செய்து பணத்தை மீளப்பெறவும் முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மேலதிக இருக்கைகள் அடுத்து வரும் மூன்று நாட்களுக்கு பிரித்து வழங்கப்பட உள்ளன.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan