Paristamil Navigation Paristamil advert login

பரிஸ் : எட்டு மாத குழந்தை பலி!

பரிஸ் : எட்டு மாத குழந்தை பலி!

19 மார்கழி 2023 செவ்வாய் 16:57 | பார்வைகள் : 10154


எட்டு மாத குழந்தை ஒன்று நேற்று டிசம்பர் 18 ஆம் திகதி பலியாகியுள்ளது. குழந்தைகளை வைத்து தள்ளிக்கொண்டு செல்லும் பெட்டி (poussette ) ஒன்றில் குழந்தையை வைத்திருந்த போது குழந்தை பலியானதாக தெரிவிக்கப்படுகிறது.

பரிஸ் 15 ஆம் வட்டாரத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. குழந்தை பராமரிப்பு பெண் ஒருவர், எட்டு மாத குழந்தை ஒன்றையும், குழந்தையின் ஒன்றரை வயது சிறுவன் ஒருவரையும் வீதியில் அழைத்து சென்ற நிலையில், சில நிமிடங்களில் குழந்தை அசைவற்று இருப்பதை அவர் அவதானித்துள்ளார்.

உடனடியாக அவசரப்பிரிவு மருத்துவர்களுக்கு தகவல் தெரிவித்து அவர்களை அழைத்துள்ளார்.

விரைந்து வந்த மருத்துவக்குழுவினர் சில முதலுதவி சிகிச்சைகளை அளித்தும் குழந்தையை காப்பாற்ற முடியவில்லை. குழந்தையின் பெற்றோர்களும், பராமரிப்பாளர் பெண்மணியும் மிகுந்த அதிர்ச்சிக்கும் மன உளைச்சலுக்கும் ஆளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடற்கூறு பரிசோதனைகளுக்காக சடலம் கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்