ஒரு வருடத்துக்கு இலவச பயணம்! - WhatsApp இல் உலாவும் செய்தி உண்மையா..??!
18 மார்கழி 2023 திங்கள் 16:56 | பார்வைகள் : 17838
2024 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் இருந்து அதன் இறுதி நாள் வரை இலவசமாக பயணம் செய்ய போட்டி ஒன்றில் வெற்றிபெற வேண்டும் எனும் செய்தி கடந்த சில நாட்களாக WhatsApp செயலி ஊடாக பகிரப்பட்டு வருகிறது. அது உண்மையா..??
’ஆயிரம் பேருக்கு அதிஷ்ட்டம். மகிழ்ச்சியான இலவச பயணம். நீங்களும் அதிஷ்ட்டசாலி ஆகலாம்!’ என ஆரம்பிக்கிறது இந்த செய்தி. அந்த செய்தியில் வழங்கப்படும் இணைப்பில் சென்று ஒரு விளையாட்டில் ஈடுபட்டால், நீங்களும் அந்த ஆயிரம் அதிஷ்ட்டசாலிகளில் ஒருவராகலாம் எனவும், வெற்றி பெறுபவர்கள் ஒரு வருடத்துக்கு இலவசமாக தொடருந்தில் பயணிக்க முடியும் எனவும் அந்த செய்தி நீள்கிறது.
SNCF இந்த அரிய வாய்ப்பை வழங்குவதாகவும் அந்த செய்தி சொல்கிறது.
ஆனால் இந்த செய்தி உண்மையில்லை. அப்படி ஒரு சலுகையினை SNCF நிறுவனம் வழங்கவில்லை. பொதுமக்கள் இது தொடர்பாக விழிப்புடன் இருக்கவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாற செய்திகளில் வரும் இணைப்புகளில் உங்களது தனிப்பட்ட விபரங்கள் எதையும் பகிரவேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், இந்த போலியான செய்தியினை பகிரவும் வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
17 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
26 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan