கிறிஸ்மஸ் விடுமுறை! - இல் து பிரான்சுக்குள் பலத்த போக்குவரத்து நெரிசல்!!
18 மார்கழி 2023 திங்கள் 16:29 | பார்வைகள் : 18798
கிறிஸ்மஸ் விடுமுறை ஆரம்பமாக உள்ள நிலையில், இவ்வார இறுதியில் இல்-து-பிரான்சுக்குள் பலத்த போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக தலைநகர் பரிஸ் மற்றும் இல் து பிரான்ஸ் மாகாணத்துக்குள் வசிப்பவர்கள் இங்கிருந்து கணிசமாக வெளியேறுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டுள்ளதால், வெளிச்செல்லும் வீதிகளில் (départs) நீண்ட தூர நெருக்கடியை சந்திக்கும் என வீதி போக்குவரத்து அவதானிப்பாளர்களான Bison Futé அறிவித்துள்ளது.
A10 மற்றும் A6 வீதிகளில் மிக நீண்ட நெருக்கடி ஏற்படும் எனவும், வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை ஆகிய இரு நாட்களும், ‘சிவப்பு’ எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
விடுமுறைக்கு சுற்றுலா செல்பவர்கள், வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு முதலும், சனிக்கிழமை காலை 6 மணிக்கு முதலும் இல் து பிரான்சை விட்டு வெளியேறும் படி பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan