’இஸ்ரேல் கொலையாளி, மக்ரோன் அதற்கு உடந்தை!” - பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக பரிசில் ஆர்ப்பாட்டம்!!
18 மார்கழி 2023 திங்கள் 07:18 | பார்வைகள் : 10725
நேற்று ஞாயிற்றுக்கிழமை பரிசில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.
பிற்பகல் 2 மணி அளவில் Place de la République பகுதியில் கூடிய ஆர்ப்பாட்டக்காரர்கள், பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக கொடிகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இஸ்ரேல்-பாலஸ்தீன சண்டையில் பொதுமக்கள் அதிகளவு கொல்லப்படுவதாகவும், போர் நிறுத்தம் அறிவிக்கப்படவேண்டும் எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை வைத்தனர்.
”காஸாவின் சிறுவர்கள், பாலஸ்தீனத்தின் சிறுவர்கள் படுகொலை செய்யப்படுகிறார்கள்!” என அவர்கள் கோஷமிட்டனர். அத்தோடு, ”இஸ்ரேல் ஒரு மனிதப்படுகொலையாளர். அதற்கு ஜனாதிபதி மக்ரோன் உடந்தையாக இருக்கிறார்” எனவும் அவர்கள் முழக்கமிட்டனர்.
4,400 பேர் வரை ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan