காவல்துறையினரின் கட்டுப்பாட்டை மீறி பயணித்த இளைஞன் - விபத்தில் பலி!!!
17 மார்கழி 2023 ஞாயிறு 16:16 | பார்வைகள் : 22328
காவல்துறையினரிடம் இருந்து தப்பித்த இளைஞன் ஒருவர், வீதி விபத்தில் சிக்கி பலியாகியுள்ளார். மார்செய் நகரில் இச்சம்பவம் வெள்ளிக்கிழமை நள்ளிரவு இடம்பெற்றுள்ளது.
9 ஆம் வட்டாரத்தில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு காவல்துறையினர் வீதி கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த போது 650 cc திறன் கொண்ட ஸ்கூட்டர் ஒன்றில் இளைஞன் ஒருவர் அதிவேகமாக பயணிப்பதை பார்த்துள்ளனர். அவர் மீது சந்தேகம் கொண்ட காவல்துறையினர் சோதனை நடவடிக்கைகளுக்காக அவரை தடுத்து நிறுத்தினர்.
ஆனால் அவர், ஸ்கூட்டரை நிறுத்தாமல் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். அதையடுத்து காவல்துறையினர் அவரை துரத்திச் சென்றனர்.
தப்பிச் சென்ற சில நிமிடங்களில் ஸ்கூட்டர் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானார். படுகாயமடைந்த இளைஞன், நள்ளிரவு 1 மணி அளவில் பலியானதாக அறிவிக்கப்பட்டார்.
காவல்துறையினரின் மோட்டார் சைக்கிளில் பொருத்தப்பட்டிருந்த சிறிய கமராவில் மேற்படி விபத்து காட்சிகள் பதிவாகியுள்ளன. அதனை ஆதாரமாக கொண்டு IGPN (காவல்துறையினரை கண்காணிக்கும் சிறப்பு படையினர்) விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan