சமூக வலைத்தளங்களில் இருந்து லோகேஷ் கனகராஜ் விலக காரணம் என்ன ?

17 மார்கழி 2023 ஞாயிறு 10:00 | பார்வைகள் : 7663
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்காலிகமாக அனைத்து சமூக வலைதளங்களில் இருந்தும் விலகி இருப்பதாக அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான ’லியோ’ திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியான நிலையில் சமீபத்தில் அவரது தயாரிப்பில் உருவான ஃபைட் கிளப்’ வெளியானது.
இந்த நிலையில் அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் ’தலைவர் 171’ படத்தை இயக்க இருக்கும் லோகேஷ் கனகராஜ் அதற்கான ஸ்கிரிப்ட் எழுதும் பணியை தொடங்க உள்ளார்.
இந்நிலையில் ’தலைவர் 171’ படத்தில் முழு கவனம் செலுத்த இருப்பதை அடுத்து அனைத்து விதமான சமூக வலைதளங்களில் இருந்தும் தற்காலிகமாக விலக இருப்பதாக லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். மேலும் தன்னை போனிலும் யாரும் தொடர்பு கொள்ள வேண்டாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து அவர் முழு கவனத்துடன் ’தலைவர் 171’ படத்தின் ஸ்கிரிப்ட் எழுத உள்ளதாக தெரிகிறது
அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக கூறப்படும் நிலையில், ஸ்கிரிப்ட் எழுதும் பணியை அதற்குள் முடிக்க வேண்டும் என்று தீவிரமாக லோகேஷ் உள்ளதாக கூறப்படுகிறது.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1