Paristamil Navigation Paristamil advert login

Melun : குழு மோதலில் இளைஞனுக்கு வாள் வெட்டு!!

Melun : குழு மோதலில் இளைஞனுக்கு வாள் வெட்டு!!

17 மார்கழி 2023 ஞாயிறு 09:17 | பார்வைகள் : 10167


Melun (Seine-et-Marne) நகரில் இடம்பெற்ற குழு மோதல் சம்பவம் ஒன்றில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். டிசம்பர் 15 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இரவு இந்த மோதல் இடம்பெற்றுள்ளது.

சிகரெட் விற்பனையில் ஈடுபடும் தொழில்சார் போட்டி கும்பல் இரண்டு ஒன்றுடன் ஒன்று பெரும் ஆயுதங்களுடன் மோதியுள்ளது. Melun RER நிலையத்திக்கு அருகே இந்த மோதல் இரவு 9 மணி அளவில் இடம்பெற்றுள்ளது.

இந்த மோதலில் 24 வயதுடைய இளைஞன் ஒருவர் வாள் வெட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த வாள் வெட்டில் ஈடுபட்ட 33 வயதுடைய ஒருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

அதே இரவில், பரிஸ் 12 ஆம் வட்டாரத்தில் உள்ள Place de la Nation பகுதியில் கத்திக்குத்து தாக்குதலில் அதே வயதுடைய மற்றொரு நபர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

வர்த்தக‌ விளம்பரங்கள்