மிஸ் பிரான்ஸ் 2024 : பா-து-கலே அழகி - பிரான்சின் அழகியாக மகுடம்!!
17 மார்கழி 2023 ஞாயிறு 06:46 | பார்வைகள் : 17543

இந்த அழகிப்போட்டியின் இறுதிப்போட்டி நேற்று டிசம்பர் 16, சனிக்கிழமை Zénith (Dijon) நகரில் இடம்பெற்றது. 2023 ஆம் ஆண்டின் Nord-Pas-de-Calais அழகியான Eve Gilles என்பவரே இறுதி வெற்றியாளராக தெரிவு செய்யப்பட்டார். 20 வயதுடைய அவர் Dunkerque நகரைச் சேர்ந்தவராவார். கணிதம் மற்றும் கணினி அறிவியலில் இளங்கலை இரண்டாம் ஆண்டு பயிலும் அவர், சிறந்த நடனக்கலைஞரும், நடன ஆசிரியரும் ஆவார்.
இவ்வருட பிரெஞ்சு அழகிக்கான இறுதிப்போட்டியில் நடுவர்களாக கடமையாற்றியது 100% பெண்களே. Miss France நிறுவனத்தின் முன்னாள் இயக்குனர் Sylvie Tellier, நடிகை மற்றும் பாடகி Stéfi Celma, மொடல் மற்றும் நிகழ்ச்சி தயாரிப்பாளர் Adriana Karembeu, பாடகி Nolwenn Leroy, குத்துச்சண்டை வீரர் Estelle Mossely, மேடை நாடக நகைச்சுவைக் கலைஞர் Elodie Poux உள்ளிட்டவர்கள் நடுவர்களாக கடமையாற்றியிருந்தார்கள்.





🔥 இன்றைய சிறப்பு சலுகை
16 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
25 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan